தனது கணவருக்கு நிகராக சம்பளம் கேட்டதால் பைஜு பாவ்ரா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தீபிகா படுகோனேவின் கையை விட்டு நழுவிதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய திரைப்படங்களில் ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் இடையே ஊதிய சமமின்மை என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது. உச்ச நடிகர்கள் வாங்கும் ஊதியத்தை பாதி கூட தங்களுக்கு கிடைப்பதில் என பல முன்னணி நடிகைகள் இந்த ஊதிய சமமின்மை குறித்து பேசியுள்ளனர். அவர்களில் நடிகை தீபிகா படுகோனே முக்கியமானவர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கதாநாயகனுக்கு நிகராக தனக்கும் ஊதியம் வேண்டும் என்று பாலிவுட்டில் தொடர்ந்து தீபிகா குரல் கொடுத்து வருகிறார். ஆண்- பெண் கலைஞர்கள் இடையேயான ஊதிய முரண்பாடு குறித்தும் அவர் பலமுறை வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார். பாலிவுட்டின் சில நடிகர்களை விடவும் அதிக ஊதியத்தை அவர் பெற்றுவருகிறார். இந்நிலையில், பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா போன்ற திரைப்படங்களை இயக்கியவரான சஞ்சய் லீலா பன்சாலி, பைஜு பாவ்ரா என்னும் பெயரில் புதிய திரைப்படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இது கடந்த 1952ம் ஆண்டு வெளியான பைஜு பாவ்ரா படத்தின் ரீமேக் ஆகும்
இதையும் பார்க்க:Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனின் கிளாசிக் போட்டோஸ்
இதில் கதாநாயகனாக பலரது பெயர் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தனது ஆஸ்தான கதாநாயகனான ரன்வீர் சிங்கை நடிக்கவைக்க சஞ்சய் லீலா விரும்புவதாக கூறப்படுகிறது. அதேவேளையில், ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக அவரது மனைவி தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க யோசிக்கப்பட்டது. எனினும், தனது கணவருக்கு சமமான ஊதியம் வேண்டும் என தீபிகா நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து படத்தில் தீபிகாவை நடிக்கவைக்கும் எண்ணம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைந்த செல்வராகவன்...!
சஞ்சய் லீலா இயக்கிய பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா ஆகிய மூன்று படங்களிலுமே ரன்வீர்-தீபிகா ஜோடி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இருவரின் நடிப்பிற்காகவே ரசிகர்களின் மனதில் இந்த திரைப்படங்கள் இடம்பெற்றன. தற்போது, சஞ்சய் லிலாவின் புதிய படத்தில் ரன்வீருடன் தீபா ஜோடி சேரப்போவதில்லை என்ற தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.