விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு தான் கெத்தாக நடந்து நடந்து வரும், வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை தீபிகா படுகோன்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஹாலிவுட்டிலும் தனது எல்லைகளை விரிவுபடுத்திய இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக 'கோச்சடயான்' என்ற படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.
தீபிகா தனது படப்பிடிப்பிலிருந்து வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பின்னணியில், நடிகர் விஜய்யின் "வாத்தி கம்மிங்" என்ற ட்ரெண்ட் செட்டிங் பாடல் இசைக்கிறது. அதை அவர் "பி.டி.எஸ் ஆஃப் பி.டி.எஸ்" என்ற தலைப்பில் தலைப்பிட்டுள்ளார். இது பல்வேறு தருணங்களில் கெத்தாக நடக்கும் அழகான பெண்ணை காட்டுகிறது. பாடலின் இசையுடன் தீபிகா நடப்பது கச்சிதமாக பொருந்திப் போகிறது.
இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் தீபிகாவிடம், விஜய்யுடன் விரைவில் இணைந்து திரையில் ஒரு மேஜிக்கை நிகழ்த்துமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வாத்தி கம்மிங் பாடல் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்தப் பாடலை அனிருத் மற்றும் கானா பாலச்சந்தர் பாடியிருந்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.