பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஷூட்டிங்கில் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் இணையத்தில் பரவின. ஆனால் அது உண்மையில்லை தான் நலமாக இருப்பதாக தீபிகா படுகோனே தெளிவுப்படுத்தியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் டாப் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கும் தீபிகா படுகோனே திருமணத்திற்கு பிறகு அதிகளவில் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சிறந்த கதை, ஹீரோயின் லீட் படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் தீபிகா தற்போது நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புரொஜெக்ட் கே’ படத்தில் பிரபாஸின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் முன்னணி பாலிவுட் பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் இந்தியில் ரெடியாகி கொண்டிருக்கும் இந்த படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.
‘நானே ஒரு இயக்குனர்; எனக்கே கதை எழுதப் பார்க்கிறார்கள்’ – வதந்திகள் குறித்து டி.ஆர். வேதனை
இந்த படத்திற்கான ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக் கொண்டிருக்கும் போது தீபிகாவுக்கு தீடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இதயதுடிப்பு அதிகம் ஆகி, தீபிகா மயங்கி விழுந்ததாகவும் உடனே அவரை அருகில் இருக்கும் ஆஸ்பிட்டலுக்கு படக்குழு அழைத்து சென்றதாக காட்டுத்தீ போல் தகவல்கள் பரவின. இது தீபிகாவின் ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆஸ்பிட்டலில் தீபிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தினருக்கு ஜெயம் ரவி ஆறுதல்… குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார்…
இந்நிலையில், இந்த தகவல் உண்மை இல்லை என தீபிகா படுகோனே மறுத்துள்ளதாக இணையதளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. தான் நன்றாக இருப்பதாகவும், தனது உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என தீபிகா ரசிகர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .இது VFX படம் என்பதால் அனைவரும் முழு பங்களிப்பு கொடுத்து நடித்து வருகிறோம். அதற்குள் யாரோ உடல்நிலை குறித்து வதந்தியை கிளப்பிவிட்டதாக தீபிகா கூறியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது. தீபிகாவின் உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதியான பின்பு தான் அவரின் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor prabhas, Bollywood, Deepika Padukone