ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபிகா படுகோன் - பி.வி.சிந்து இன்ஸ்டாகிராமில் சுவாரஸ்ய உரையாடல்!

தீபிகா படுகோன் - பி.வி.சிந்து இன்ஸ்டாகிராமில் சுவாரஸ்ய உரையாடல்!

பி.வி.சிந்து - தீபிகா படுகோன்

பி.வி.சிந்து - தீபிகா படுகோன்

இவர்களின் இந்த உரையாடல் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இன்ஸ்டாகிராமில் நடிகை தீபிகா படுகோனிற்கும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கும் சுவாரஸ்யமாக உரையாடல் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

  பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இதற்கிடையே, தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதி மும்பையில் உள்ள அலிபாக் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

  இந்நிலையில் பேட்மிண்டன் விளையாடிய பிறகு தனது படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ’விளையாட்டிற்கு பிறகான பொலிவு’ எனக் குறிப்பிட்டிருந்தார் தீபிகா படுகோன். இதற்கு ‘எவ்வளவு கேலரிகளுக்குப் பிறகு?’ எனக் கேட்டிருந்தார் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து.
   
  View this post on Instagram

   

  A post shared by Deepika Padukone (@deepikapadukone)  இவர்களின் இந்த உரையாடல் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தவிர கடந்த வார இறுதியில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி, சிந்துவுடன் இரவு உணவு உண்டனர். விளையாட்டு நட்சத்திரம் சிந்துவுடன் எடுத்துக் கொண்ட படத்தையும் அவர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Deepika Padukone