• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நயன்தாரா படத்தில் சிஎஸ்கே வீரரின் தங்கை!

நயன்தாரா படத்தில் சிஎஸ்கே வீரரின் தங்கை!

மால்தி சஹார்

மால்தி சஹார்

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தற்போது ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்ற படத்தைத் தயாரிக்கிறது.

  • Share this:
    நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரின் தங்கை.

    நடிகை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்து வருகின்றனர். தற்போது அவர்கள் ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்ற படத்தைத் தயாரிக்கின்றனர்.

    இதில் ஹீரோவாக சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த கேகே, நடிக்கிறார். இது தான் ஹீரோவாக அவர் நடிக்கும் முதல் படமும் கூட. பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தியும் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    அதோடு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மால்தி சாஹர் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹரின் தங்கை. சி.எஸ்.கே மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றுள்ள சாஹரின் தங்கை தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: