ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு ட்ரெய்லரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா? வீடியோ!

வாரிசு ட்ரெய்லரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா? வீடியோ!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

Varisu Trailer | நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிடு வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், இவர்களுடன் ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன்.

காதல், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என்று அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக வாரிசு இருக்கும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது படத்தின் ட்ரெய்லர். படத்தின் ட்ரெய்லர் தொடங்கும் போதே கூட்டுக் குடும்பத்தின் பெருமையை கூறுகின்றனர். சரத்குமார் மற்றும் ஜெயசுதாவின் மூன்றாவது மகனாக விஜய் இதில் நடித்துள்ளார். அதில் தந்தையான சரத்குமாருக்கும் மூன்றாவது மகனான விஜய்க்கும் இடையே விரிசல் உள்ளது தெரிகிறது.

விஜய் தனது தாயிடம் பேசும் போது எல்லா இடமும் நம்ம இடம்தான் என்று கூறுவதன் மூலம் அவர் தனது பெரிய குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்கிறார் என்பது தெரிகிறது. மேலும், தந்தை சரத்குமார் மற்றும் சகோதரர்கள் பெரிய தொழிலதிபர்களாக இருப்பது போன்று காட்டப்படுகிறது. அந்த தொழில் போட்டியின் எதிரியாக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பதும் ட்ரெய்லரில் தெரிகிறது.

பிரகாஷ் ராஜால் தனது குடும்பத்திற்கும், தந்தையின் பிசினசிற்கும் பிரச்னை ஏற்படும் போது அதனை சரி செய்வதற்காக விஜய் வந்து பிரகாஷ் ராஜூடன் போட்டியிடுவது போல காட்சிகள் அமைந்துள்ளது. இதற்கிடையே ராஷ்மிகாவுடனான காதல், யோகிபாபு உடன் காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக ட்ரெய்லர் அமைந்துள்ளது.

Also read... உத்தமவில்லன் நஷ்டம்... கமல் அளித்த வாக்குறுதி.. மனம் திறந்த லிங்குசாமி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Varisu