ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெள்ளிக்கிழமை வெளியான படங்களின் வசூல் கடும் பாதிப்பு… காரணம் இதுதானா?

வெள்ளிக்கிழமை வெளியான படங்களின் வசூல் கடும் பாதிப்பு… காரணம் இதுதானா?

வெள்ளியன்று ரிலீஸான படங்கள்

வெள்ளியன்று ரிலீஸான படங்கள்

பாபா படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியான படங்கள் குறைவான வசூல் செய்து வருகின்றன. இது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதங்களில் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆகுது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் படங்கள் இந்த மாதம் வெளியாகி வருகின்றன.

கடந்த வெள்ளியன்று வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ், ஜீவாவின் வரலாறு முக்கியம், விஜயானந்த், குருமூர்த்தி, ஈவில், எஸ்டேட், DR 56 உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதேபோன்று ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான பாபா படம் மீண்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

'ஃபாண்டா பாட்டில்.. எலும்புக்கூடு' பாடி ஷேமிங் குறித்து மனம் திறந்த திவ்யபாரதி!

அந்த வகையில் பாபா படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதே நேரம் வெள்ளியன்று மாண்டஸ் புயல் உருவானதால் சினிமா ரசிகர்கள் வரத்து தியேட்டர் பக்கம் குறைவாகவே காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக புயலின் தாக்கம் இருந்த காரணத்தால், பெரும்பாலான ரசிகர்கள் தியேட்டர் பக்கம் வருவதை தவிர்த்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பெருவாரியான மாவட்டங்களில் மாண்டஸ் புயல் பாதிப்பு திரைப்படங்களையும் கடுமையாக தாக்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தபோதிலும் தியேட்டர்களில் சினிமா ரசிகர்களின் வரத்து மிகக் குறைவாகவே உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. போதாக்குறைக்கு குளிரும் வெளுத்து வாங்குவதால் பொது மக்கள் பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பாட்டு வரி காணோம்.. முக்கிய சீன் இல்லை.. ரீ ரிலீஸ் ஆன பாபா படத்தில் இவ்வளவு மாற்றங்களா?

அடுத்தடுத்த நாட்களில் வெயில் வந்தாலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடக்கூடிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் கடந்து விட்டதால் கடந்த வெள்ளியன்று ரிலீஸான படங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அடுத்த வாரத்தில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதாலும், அந்த படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதாலும், இந்த வார ரிலீஸ்கள் பின்னடைவை சந்திக்கும் என்றே கூறப்படுகிறது.

First published:

Tags: Kollywood