ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாழ்க்கையின் மோசமான நாட்கள்.. முத்தக்காட்சி சர்ச்சை பற்றி ராஷ்மிகா பேட்டி!

வாழ்க்கையின் மோசமான நாட்கள்.. முத்தக்காட்சி சர்ச்சை பற்றி ராஷ்மிகா பேட்டி!

ராஷ்மிகா

ராஷ்மிகா

இதை பற்றி மந்தனா முதன் முறையாக மவுனம் கலைந்திருப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டியர் காம்ரேட் படத்தில் விஜய் தேவர்கொண்டாவுடன் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி  ராஷ்மிகா மந்தனா பேட்டி ஒன்றில்  மனம் திறந்துள்ளார். 

  விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த திரைப்படம்  டியர் காம்ரேட். தெலுங்கு படமான இது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியாக பாராட்டுக்களை அள்ளியது. இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகாவின் முத்தக்காட்சி பேசும் பொருளானது. இணையத்தில் இதுக் குறித்த ட்ரோல்கள், மீம்ஸ்கள் பல வெளியாகி இருந்தன. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

  அவர்கள் விட்ட எந்த சாபமும் பலிக்கவில்லை.. மகள் பிறந்த மகிழ்ச்சியில் விஜய் டிவி நவீன்!

  டியர் காம்ரேட் படத்தில் துணிச்சலாக அந்த சீசனில் நடித்திருந்த ராஷ்மிகா  பல ட்ரோல்களை சந்தித்த பின்பு அதிலிருந்து வெளியே வர கடினமாக இருந்ததாக கூறியுள்ளார். அந்த பேட்டியில் இதுக் குறித்து அவர் கூறியிருப்பதாவது “ அந்த சமயத்தில் இதுப்பற்றி பல வேதனையான நிகழ்வுகளை சந்தித்தேன். கவலை தரும் பல செய்திகளை இதுப்பற்றி படித்தேன். அந்த நாட்கள் எத்தனை வேதனையானவை. வாழ்க்கையின் மோசமான நாட்கள் அவை” என மந்தனா தெரிவித்துள்ளார்.

  அருள் நிதியின் சஸ்பென்ஸ் திரில்லர் 'தேஜாவு’.. பிரபல டிவி சேனலில் ஒளிப்பரப்பு!

  இதை பற்றி மந்தனா முதன் முறையாக மவுனம் கலைந்திருப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. புஷ்பா படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளா ராஷ்மிகா இப்போது பாலிவுட் படத்தின் புரமோஷன் பணியில் முப்பையில் பிஸியாக இருக்கிறார். ’குட்பாய்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா , அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ராஷ்மிகாவின் முதல் இந்தி படமான குட் பாய் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Actress Rashmika Mandanna, Kollywood, Tollywood, Vijay devarakonda