ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vaathi Coming: வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆரஞ்ச் ஆர்மியின் கலக்கல் நடனம்!

Vaathi Coming: வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆரஞ்ச் ஆர்மியின் கலக்கல் நடனம்!

நடுவில் வார்னர்.

நடுவில் வார்னர்.

ஐ.பி.எல் சூடு பிடித்திருக்கும் நிலையில், விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஐதராபாத்தின் ஆரஞ்ச் ஆர்மியினர் நடனமாடியிருப்பது, சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஐ.பி.எல் சூடு பிடித்திருக்கும் நிலையில், விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஐதராபாத்தின் ஆரஞ்ச் ஆர்மியினர் நடனமாடியிருப்பது, சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

படத்தில் இடம்பெற்ற 'குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது இந்தப் பாடலுக்கு ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ரஷித் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய 3 பேரும் அந்த ஷோல்டர் மூமெண்டை போட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே யூ-ட்யூபில் வெளியான ’வாத்தி கம்மிங்’ வீடியோ பாடல், தற்போது வரை 130 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: David Warner, Master, Rashid Khan, Sunrisers Hyderabad