Thalapathy Vijay: விஜய்யாக மாறிய டேவிட் வார்னர் - வைரலாகும் வீடியோ!

விஜய்யாக டேவிட் வார்னர்

விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற "செல்லா குட்டி" பாடலில் டேவிட் வார்னர் இடம்பெறும் ஒரு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், நடிகர் விஜய்யின் பாடலில் தன் தலையை மாற்றி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் எப்போதும் தனது இந்திய ரசிகர்களை டிக்டாக் வீடியோக்களால் மகிழ்விப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை நடன வீடியோக்கள் அல்லது இந்திய திரைப்படங்களின் காட்சிகளில் நடிகர்களுடன் முகங்களை மாற்றியவையாக இருக்கும்.



     




    View this post on Instagram





     

    A post shared by David Warner (@davidwarner31)






    இந்நிலையில் விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற "செல்லா குட்டி" பாடலில் டேவிட் வார்னர் இடம்பெறும் ஒரு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை தமிழ் ரசிகர்கள் எவ்வளவு விரும்புவார்கள் என்பதை குறிப்பிடத் தேவையில்லை. டேவிட் வார்னர் முன்பு மாஸ்டர் பட காட்சியில் விஜய்யின் முகத்தை தனதாக மாற்றிய வீடியோவை பதிவேற்றியிருந்தார். ஷாருக் கான், அமீர்கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்களின் காட்சிகளை ரிஃபேஸ் ஆப் மூலம் மாற்றி ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் சுற்றுப்பயணங்களில் இருந்து வெளியேறிய டேவிட் வார்னர் தற்போது ஓய்வில் இருக்கிறார். 34 வயதான டேவிட் வார்னர், ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: