Home /News /entertainment /

Vaathi Coming: விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு டேவிட் வார்னர் அசத்தல் நடனம்!

Vaathi Coming: விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு டேவிட் வார்னர் அசத்தல் நடனம்!

டேவிட் வார்னர் நடனம்

டேவிட் வார்னர் நடனம்

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

    படத்தில் இடம்பெற்ற 'குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by David Warner (@davidwarner31)






    இந்நிலையில் தற்போது பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார். டிவியில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல் ஓட, அதைப் பார்த்துக் கொண்டே, விஜய்யின் ஸ்டெப்களை முயற்சித்திருக்கிறார். அந்த வீடியோவில் வார்னரின் மகளும் இடம்பெற்றிருக்கிறார். சின்னக் குழந்தைகளை தனது நடிப்பால், ஆடலால், பாடலால் கவர்ந்திருக்கும் விஜய், டேவிட் வார்னர் மகளையும் கவர்ந்திருப்பதாக தெரிகிறது. தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor vijay

    அடுத்த செய்தி