இயக்குனர் ஷங்கர் முதல்முறையாக நேரடித் தெலுங்குப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ராம் சரண் நடிக்கும் இந்தப் படம் RC15 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்பதை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மறுபடியும் உறுதி செய்துள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் தெலுங்கு, தமிழில் தயாரானாலும் மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். ராம் சரண் நாயகனாக நடிக்க கியாரா அத்வானி நாயகியாக நடித்து வருகிறார். அஞ்சலி, ஜெயராம், ரகுமான் உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதல்முறை.
இந்தப் படத்தின் முதலிரு ஷெட்யூல்ட்கள் முடிந்த நிலையில் மூன்றாவது ஷெட்யூல்டை தற்போது ஆரம்பித்துள்ளனர். ராம் சரண் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. பொலிடிகல் த்ரில்லராக தயாராகும் இந்தப் படம் 2023 சங்கராந்திக்கு (பொங்கல்) வெளியாகும் என கூறப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக படவெளியீடு தள்ளி வைக்கப்படலாம் என்று வதந்தி கிளம்பிய நிலையில், படம் 2023 சங்கராந்திக்கு வெளியாவதை தயாரிப்பாளர் தில் ராஜு உறுதி செய்துள்ளார்.
சுமார் 170 கோடிகள் பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தின் அனைத்து மொழி சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை ஸீ நெட்வொர்க் 200 கோடிகளுக்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.