சும்மா கிழி... தர்பார் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் - வீடியோ!

  • Share this:
தர்பார் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படிக்க : சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறாரா பிக்பாஸ் கவின்?


படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மோஷன் போஸ்டரை வெளியிட்டிருந்த படக்குழு தற்போது ‘சும்மாகிழி’ என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளது. தமிழ் இந்தப் பாடலை ஆளப்போறான் தமிழன் பாடல் மூலம் பிரபலமடைந்த பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். அனிருத் இசையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தப் பாடலை பாடியுள்ளார்.எஸ்.பி.பி குறித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டிருந்த இசையமைப்பாளர் அனிருத், “காலங்கள் பல கடந்துவிட்டன. ஆனால் இந்த கலைஞன் இன்னும் நமக்கு தூண்டுகோளாக இருக்கிறார். சும்மா கிழி பாடலுக்காக நன்றி” என்று கூறி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading