வைரலாகும் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

news18
Updated: September 11, 2019, 12:20 PM IST
வைரலாகும் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
தர்பார்
news18
Updated: September 11, 2019, 12:20 PM IST
தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. இதையடுத்து ரஜினிகாந்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. அந்த புகைப்படங்களை வைத்து டைட்டில் போஸ்டரை வடிவமைக்க ரசிகர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்கள் பலவிதமான போஸ்டர்களை வடிவமைத்து ட்விட்டரில் வெளியிட்டனர்.


இந்நிலையில் தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு முடித்து ரஜினிகாந்த் திரும்பும் காட்சிகளை மருத்துவமனை நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.


வீடியோ பார்க்க: விஜய் சேதுபதியை புகழ்ந்த அதீதி ராவ்!

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...