ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்காக ஒன்றிணையும் இந்தியத் திரையுலகம்!

news18
Updated: November 5, 2019, 8:13 PM IST
ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்காக ஒன்றிணையும் இந்தியத் திரையுலகம்!
தர்பார் போஸ்டர்
news18
Updated: November 5, 2019, 8:13 PM IST
‘தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் 4 மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் 7-ம் தேதி இந்தப் படத்தின் தீம் மியூசிக் மற்றும் வீடியோ போஸ்டர் வெளியாகும் என்றும் சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் தகவல் வெளியிட்டார்.


இந்நிலையில் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதை அந்தந்த மொழிகளில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட உள்ளார்கள். இதன் மூலம் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டுக்காக இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
First published: November 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...