தர்பார் படத்தின் 4 நாள் வசூல் - லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தர்பார் படத்தின் 4 நாள் வசூல் - லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தர்பார்
  • Share this:
தர்பார் திரைப்படத்தின் 4 நாள் வசூலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தர்பார். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் வில்லனாக நடிகர் சுனில் ஷெட்டியும் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி தமிழில் வெளியான இத்திரைப்படம் அதே நாளில் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ஏராளமான திரையரங்குகளில் வெளியானது. படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்கள் ரஜினிகாந்தின் ஸ்டைலைக் கொண்டாடினாலும் கலவையான விமர்சனங்களும் இப்படத்துக்கு கிடைத்தன.


இந்நிலையில் இந்தப் படம் 4 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக வெளியான போஸ்டரில், யார் வேண்டுமானாலும் விளையாட்டில் ஈடுபடலாம். ஆனால் சிம்மாசனம் மாமன்னருக்கே உரியது என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



மேலும் படிக்க: 11 பிரிவுகளில் ஜோக்கர் படம் பரிந்துரை! ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியல் முழு விவரம்
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading