Home /News /entertainment /

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 'மாறன்'... ஓடிடி ரிலீஸில் ஹாட்ரிக் அடிக்கும் தனுஷ் படங்கள்

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 'மாறன்'... ஓடிடி ரிலீஸில் ஹாட்ரிக் அடிக்கும் தனுஷ் படங்கள்

ஒரு முன்னணி நடிகரின் படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி வருவது அவரது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இந்நிலையில் எதிர்பார்ப்பை ஏற்படுததிய மாறன் படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்), படங்களைத் தொடர்ந்து மாறன் படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோன்று ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த கிரே மேன் படமும் பிரபல ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடைசியாக தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. கொரோனா பாதிப்புகளைத் தொடர்ந்து ஓடிடியில் படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளியிடப்பட்டு வருகின்றன. சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே முதலில் ஓடிடியில் வெளியான நிலையில், அந்த ட்ரெண்டை, சூர்யா தயாரித்த சூரரைப் போற்று திரைப்படம் மாற்றி அமைத்தது.

    தயாரிப்பாளர்களின் கடும் எதிர்ப்பை மீறி, சூர்யா அமேசான் ஓடிடி தளத்தில் சூரரைப் போற்று படத்தை வெளியிட்டார். படமும், எதிர்பார்ப்பை மீறிய வெற்றியைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக பல படங்கள் வெளியான நிலையில், தனுஷ் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜகமே தந்திரம் படமும் கடந்த ஜூன் 18-ல் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகி தனுஷ் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.

    இதற்கிடையே, தனுஷ் பாலிவுட்டில் அக்சய் குமாருடன் அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து வந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இந்தப் படமும் திரைக்கு வராமல், கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் கடந்த டிசம்பர் 24-ம்தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

    ஒரு முன்னணி நடிகரின் படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி வருவது அவரது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இந்நிலையில் எதிர்பார்ப்பை ஏற்படுததிய மாறன் படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

    இதன் மோஷன் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், தனுஷ் ரசிகர்களிடம் முன்பிருந்த உற்சாகத்தை பார்க்க முடியவில்லை. மோஷன் போஸ்டரை பார்த்தவர்கள், பி.ஜி.எம். நன்றாக உள்ளதெனக் கூறி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாரஷை பாராட்டி வருகின்றனர்.

    தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு தெலுங்கில் சார் என்று பெயர் வைத்துள்ளனர்.

    2 மொழிகளில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி