• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் உடல்நிலை கவலைக்கிடம்

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் உடல்நிலை கவலைக்கிடம்

சிவசங்கர் மாஸ்டர் அஜித்தின் வரலாறு, விஜய்யின் சர்கார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

  • Share this:
    நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் அவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் AlG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து இருந்து வருகிறார்.

    அவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை. இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தனது அப்பாவுக்கு உதவும்படி சிவசங்கர் மாஸ்டரின் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதோடு திரைத்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மண் வாசனை, திருடா திருடி, மகதீரா, பாகுபலி 1 உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ள சிவசங்கர் மாஸ்டர், மகதீரா படத்தில் தீர தீர என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருதையும் பெற்றுளார். அதோடு வரலாறு, சர்கார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: