மணிரத்னம் படத்தின் பாடல் வரி என்பதால் படத்தின் தலைப்பாக பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு மணிரத்னத்திற்கு போன் செய்துள்ளார் பிருந்தா. விஷயத்தை சொன்னதும், தாராளமாக வைத்துக்கொள். அப்படியே படத்தை எனக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் போட்டுக்கொள் என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.
மணிரத்னம் என்றால் இறுக்கமான, அதிகம் பேசாத இயக்குனர் மணிரத்தினத்தின் தோற்றம்தான் நினைவுக்கு வரும். தனது படங்கள் குறித்தே நாலு வரிக்கு மேல் பேசாதவர். அவர் நகைச்சுவையாக பேசக்கூடியவர், தன்னைச் சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்திருப்பவர் என்று சொன்னால் யாருக்கும் நம்பக் கடினமாக இருக்கும். ஆனால் அதுவும் உண்மைதான். பல நேரங்களில் மணிரத்னமும் நகைச்சுவையாக பேசி சூழலை கலகலப்பாக வைக்கிறவர்தான். இதற்கு நடன இயக்குனர் பிருந்தா சமீபத்தில் சொல்லியிருக்கும் நிகழ்வே உதாரணம்.
பிரபல நடன இயக்குனர் பிருந்தா முதல்முறையாக ஹே சினாமிகா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி, காஜல் அகர்வால் நடித்திருக்கும் இத்திரைப்படம் மார்ச் 3ஆம் தேதி ரிலீசாகிறது.
ஹே சினாமிகா என்பது மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற பாடல் வரி. துல்கர் சல்மான் இந்தப் படத்தில் நடித்திருந்தார். மணிரத்னம் படத்தின் பாடல் வரி என்பதால் படத்தின் தலைப்பாக பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு மணிரத்னத்திற்கு போன் செய்துள்ளார் பிருந்தா. விஷயத்தை சொன்னதும், தாராளமாக வைத்துக்கொள். அப்படியே படத்தை எனக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் போட்டுக்கொள் என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.
சிலரைப் போல் தனது படங்களின் தலைப்பை வேறொருவருக்கு விட்டுத்தர மணிரத்னம் அடம் பிடிப்பதில்லை. அதேபோல் இன்னொருவரின் தலைப்பை அடம்பிடித்து வாங்கிக் கொள்வதுமில்லை. தமிழ்சினிமாவில் ஊறிப் போயிருக்கும் சென்டிமென்ட் சிக்கலில் அவர் சிக்கிக் கொள்வதும் இல்லை.
உதாரணமாக படத்திற்கு பூஜை போட்டு கற்பூரம் காட்டி பூசணிக்காய் உடைக்காமல் எந்தப் படத்தையும் யாரும் தொடங்குவது இல்லை. ஆனால் அப்படி ஒரு சடங்கை மணிரத்தினம் இதுவரை செய்ததில்லை.
அதேபோல் கடைசி நாள் படப்பிடிப்பை பூசணிக்காய் உடைத்து நிறைவு செய்யும் சென்டிமென்டை அவர் இதுவரை கடைப்பிடித்தது இல்லை. குறிப்பாக, படம் தோல்வியடைந்தால் அதற்கான காரணத்தை மற்றவர்களிடம் தேடும் பழக்கமும் அவரிடம் இல்லை என்பது முக்கியமானது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.