• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாஸ் கெட்டப்பில் காட்சியளிக்கும் நண்பன் பட மில்லிமீட்டர் - நெட்டிசன்கள் வியப்பு!

மாஸ் கெட்டப்பில் காட்சியளிக்கும் நண்பன் பட மில்லிமீட்டர் - நெட்டிசன்கள் வியப்பு!

ரின்சன்

ரின்சன்

ரெட்டை சுழி, நீயும் நானும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் மில்லிமீட்டர் என்ற முக்கிய கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார்.

  • Share this:
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் அதில் பங்கேற்கும் திறமையாளர்களின் வாழ்க்கையை மாற்றி விடுகின்றன. சாங்ஸ் ரியாலிட்டி ஷோ, டான்ஸ் ரியாலிட்டி ஷோ, காமெடி ரியாலிட்டி ஷோ, சமையல் ரியாலிட்டி ஷோ என எத்தனை வகையான ஷோக்களை பல சேனல்கள் ஒளிபரப்பானாலும் விஜய் டிவி ஷோவில் பங்கேற்பவர்களுக்கு கிடைக்கும் புகழும், வாய்ப்பும், மக்களின் வரவேற்பும் அவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு இருக்கிறது என்பதே உண்மை.

பல சீசன்களை கடந்துள்ள விஜய் டிவி-யின் சூப்பர் ஹிட் ஷோக்களான சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல ஷோக்கள் திறமை வாய்ந்த பாடகர்களையும், டான்சர்களையும், நடிகர்களையும் தமிழ் திரை உலகிற்கு தந்துள்ளது. அந்த வகையில் ஜோடி நம்பர் 1 சீசன் 6-ல் பங்கேற்று டான்ஸில் பெரியவர்களுக்கே டஃப் கொடுத்த சிறு பையனான (அப்போது) ரின்சன் சைமன் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். உண்மையில் ஜோடி நம்பர் 1-ன் இந்த ஆறாவது சீசன் சற்று வித்தியாசமாகவே நடந்தது.

பொதுவாக இதில் பங்கேற்பவர்கள் எதிர் பாலினத்தவருடன் ஜோடி சேர்க்கப்படுவர். ஆனால் இதில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் என்று ஜோடி பிரிக்கப்பட்டனர். அதே போல ஜோடி நம்பர் 1-ல் பெரியவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் தகுதி வாய்ந்த குழந்தைகள் ஜோடிகளாக சேர்க்கப்பட்டனர்.

அப்படி உள்நுழைந்த ரின்சன் சைமன் தனது அபார டான்ஸ் திறமையால் அந்த சீசனை ஒரு கலக்கு கலக்கினார். சிறு வயதிலிருந்தே டான்ஸ் மற்றும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த ரின்சன் ஜோடி நம்பர் 1-ல் பங்கேற்பதற்கு முன், ஜெயா டிவி-யின் லிட்டில் மாஸ்டர்ஸில் பங்கேற்றார். ஜோடி நம்பர் 1-க்கு பிறகு பாய்ஸ் vs கேர்ள்ஸ் ஷோவிலும் பங்கேற்றார். தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு காளை படத்தில் இடம்பெற்ற குட்டி பிசாசே பாடலில் பேக்ரவுண்ட் டான்சராக வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.



ரெட்டை சுழி, நீயும் நானும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் மில்லிமீட்டர் என்ற முக்கிய கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். தொடர்ந்து சுட்டகதை, என்றென்றும், நளனும் நந்தினியும், ப பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

Also read... அரண்மனை 3 படம் எப்படி இருக்கிறது? ட்விட்டர் விமர்சனம்!

இதனிடையே ரின்சன் சைமனின் போட்டோ ஒன்று இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உயரமாகி தாடியும், மீசையுமாக ஸ்டைல் லுக்கில் காணப்படுகிறார். இதனை பார்க்கும் நெட்டிசன்கள் அட நம்ம மில்லிமீட்டரா இது.! அதற்குள் பல சென்டிமீட்டர் உயரம் வளர்ந்து விட்டாரே என்று வியப்புடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: