ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு - இந்த விஷயத்துல நடிகர் விஜய், பவன் கல்யாண் மாதிரி... ஜானி சொன்ன காரணம்!

வாரிசு - இந்த விஷயத்துல நடிகர் விஜய், பவன் கல்யாண் மாதிரி... ஜானி சொன்ன காரணம்!

விஜய் - பவன் கல்யாண்

விஜய் - பவன் கல்யாண்

Varisu Vijay விஜய் இந்தப் பாடலில் ஒரே ஷாட்டில் 1.20 நிமிடம் தொடர்ந்து நடனமாடினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, இயக்குநர் வம்சி, ராஷ்மிகா மந்தானா, படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

விழாவில் நடிகர் விஜய் குறித்து பேசிய நடன இயக்குநர் ஜானி, “ரஞ்சிதமே பாடல் ஷுட்டிங்கிற்கு முன் என்னிடம் பாடல் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும், ரசிகர்கள் என் பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று தெரிவித்தார். விஜய் இந்தப் பாடலில் ஒரே ஷாட்டில் 1.20 நிமிடம் தொடர்ந்து நடனமாடினார். பவன் கல்யாண் போல நடிகர் விஜய் ஒரு ஜென்டில்மேன்” என்று குறிப்பிட்டார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Pawan Kalyan, Varisu