ரஜினி 168 : பாடலுடன் தொடங்கிய படப்பிடிப்பு - சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டு பெற்ற இமான்!

ரஜினி 168 : பாடலுடன் தொடங்கிய படப்பிடிப்பு - சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டு பெற்ற இமான்!
ரஜினிகாந்த் உடன் டி.இமான்
  • Share this:
தான் இசையமைத்த பாடலைக் கேட்டு ரஜினிகாந்த் பாராட்டியதாகவும், முதல்நாள் படப்பிடிப்பு பாடலுடன் துவங்கியதாகவும் இமான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் 2020-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். எந்திரன், பேட்ட படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தையுன் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்நாள் படப்பிடிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் இசையமைப்பாளர் டி.இமான், “பாடலுடன் தொடங்கிய முதல்நாள் படப்பிடிப்பில் எளிமையின் உருவமான ரஜினிகாந்தை சந்தித்தேன். அவர் பாடலை பாராட்டிப் பேசியது உத்வேகமாக இருந்தது. என்ன ஒரு ஒளி. அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கக்கூடியவராக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.



Also see:

First published: December 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading