இசையமைப்பாளர் டி.இமானின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட், அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இசையமைப்பாளர் டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அவருக்கு வெரோனிகா, பிளெஸிகா என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே கடந்த வருடம் இமான் - மோனிகா இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து அமலி உபால்டு என்பவரை கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் இமான். அதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து தனது மறுமணம் குறித்து முகநூலில் பதிவிட்ட டி.இமான், தனது இரண்டு மகள்களுக்காக காத்திருப்பதாக உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இமானின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அவரது முன்னாள் மனைவி மோனிகா, அதில் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “டியர் டி.இமான், உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் 12 வருடம் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம். அதற்காக வருத்தப்படுகிறேன்.
மகள்களுக்காக காத்திருக்கிறேன்.. மறுமணத்திற்கு பின் டி.இமான் உருக்கம்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அது நடக்கவில்லை எனில் நடிப்பை விட்டு விடுவேன் - நடிகர் சித்தார்த்
கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த குழந்தைகளை நீங்கள் பார்க்கவும், கவனிக்கவும் இல்லை. தற்போது அவர்களுக்கும் மாற்று கண்டுப்பிடித்துவிட்டீர்களா? எது நடந்தாலும் என் குழந்தைகளை உங்கள் அப்பாவிடம் இருந்து நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் புது குழந்தையையும் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துகள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.