Home /News /entertainment /

இரண்டாவது திருமணம் இவரோடு தான் - ஆச்சர்யப்படுத்திய டி.இமான்!

இரண்டாவது திருமணம் இவரோடு தான் - ஆச்சர்யப்படுத்திய டி.இமான்!

டி.இமான்

டி.இமான்

மறுமணம் செய்துக் கொள்வதாக இருந்தால், தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என இமான் தெரிவித்துள்ளார்.

    மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் மறுமணத்திற்கு போட்டிருக்கும் கண்டிஷன்கள் தான் தற்போதைய ஹாட்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவரது இசையில் சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அண்ணாத்த படத்தில் சிறப்பாக பணியாற்றியதன் பொருட்டு ரஜினிகாந்திடம் சிறப்பு பரிசையும் பெற்றார்.

    தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரையில் மோனிகா ரிச்சர்டு என்பவருடன் கடந்த 2008-ம் ஆண்டு இமானுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே தனது மனைவியை விட்டு பிரிவதாக கடந்த டிசம்பர் இறுதியில் அறிவித்தார் இமான்.

    மனைவி திருமணத்திற்கு வந்த கணவன் முத்துராசு... விறுவிறுப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் 2!

    அந்த பதிவில், ”என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை என்பது பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட்டும் சட்டபூர்வமாக கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல என குறிப்பிட்டிருந்தார்.

    ஐஸ்வர்யாவை பத்தி பேச எனக்கு உரிமை இல்ல, என் தங்கச்சி எப்போவும் நல்லாருக்கணும் - ராகவா லாரன்ஸ்

    இந்நிலையில் தற்போது தனது மறுமணம் குறித்து பேசியுள்ள இமான், மறுமணம் செய்துக் கொள்வதாக இருந்தால், தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும், அவர் ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும், தன்னுடைய குழந்தைகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: D.imman

    அடுத்த செய்தி