ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நலத்திட்டங்கள் மூலம் விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய கடலூர் விஜய் மக்கள் இயக்கம்!

நலத்திட்டங்கள் மூலம் விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய கடலூர் விஜய் மக்கள் இயக்கம்!

விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

இணையத்தில் ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்வது முதல், களத்தில் இறங்கி நலப்பணிகளை செய்வது வரை விஜய் ரசிகர்களுக்கு நிகர் அவர்களே தான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் விஜய் மக்கள் இயக்கம் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் விருத்தாசலத்தில் அரிசி, புடவை, குடம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் விஜய் கடந்த 22-ம் தேதி தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். நடிப்பு, நடனம், இசை, ஆக்‌ஷன், திரை மொழி, உடல் மொழி என ஒவ்வொன்றிலும் தன்னை செதுக்கிய விஜய், தனது ஒவ்வொரு அசைவிலும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்.

சின்ன குழந்தைகள் முதல் வயதான தாத்தா, பாட்டி வரை குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஒரு நடிகரைப் பிடிக்கிறதென்றால் அது ரஜினிக்குப் பிறகு விஜய் தான். பல இளம் தலைமுறையினருக்கு உதாரணமாக திகழும் விஜய்க்கு பிரபலங்கள் பலர் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவரது ரசிகர்களின் கொண்டாட்டங்களைப் பற்றி தனியே சொல்லத் தேவையில்லை.

வாரிசு போஸ்டரில் விஜய் அமர்ந்திருக்கும் பைக் குறித்த சுவாரஸ்ய தகவல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இணையத்தில் ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்வது முதல், களத்தில் இறங்கி நலப்பணிகளை செய்வது வரை விஜய் ரசிகர்களுக்கு நிகர் அவர்களே தான். விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுவாகவே ரத்த தான முகாம், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல நலப்பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் விஜய் மக்கள் இயக்கம், மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் விருத்தாசலத்தில் அரிசி, புடவை, குடம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

First published:

Tags: Thalapathy vijay