Home /News /entertainment /

Thalapathy Vijay: மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வழிகாட்டி - அசத்திய கடலூர் விஜய் ரசிகர்கள்!

Thalapathy Vijay: மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வழிகாட்டி - அசத்திய கடலூர் விஜய் ரசிகர்கள்!

விஜய்

விஜய்

10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் ஆன்லைன் மூலம் ‘தளபதி மாணவர் வழிகாட்டி’ என்ற நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அசத்தியிருக்கிறார்கள் கடலூர் விஜய் ரசிகர்கள்.

    சில நடிகர்களை ஃபேமிலி ஆடியன்ஸுக்குப் பிடிக்கும், சிலரை இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்குப் பிடிக்கும், வேறு சிலரையோ குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், ஆதர்ச நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் விஜய். நடிப்பு, ஸ்டைல், நடனம், ஆக்‌ஷன், பாடல் என அனைத்திலுமே எல்லா தரப்பினரையும் கவர்ந்திருப்பது விஜய்யின் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே ரசிகர் என்றால், படங்களை மட்டும் பார்த்தால் போதாது சமூகத்திற்கும் பயனுள்ள விஷயங்களை செய்ய வேண்டும் என முன்னுதாரணமாக இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அந்த வகையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் ஆன்லைன் மூலம் ‘தளபதி மாணவர் வழிகாட்டி’ என்ற நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். இதனை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. தொடர்ந்து பல சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் விஜய் ரசிகர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor vijay

    அடுத்த செய்தி