Home /News /entertainment /

வறுமையால் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட குக்கூ பட நடிகர்

வறுமையால் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட குக்கூ பட நடிகர்

குக்கூ திரைப்படம்

குக்கூ திரைப்படம்

குக்கூ படத்தில் பார்வையற்றவர்கள் நிறைய பேர் நடித்திருந்தனர். அதில் தினேஷின் நண்பனாக நடித்திருந்தவர் இளங்கோவன்.

    சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வறுமையால் அவதிப்படும் குக்கூ பட நடிகர் இளங்கோவன் தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    2014-ம் ஆண்டு இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் குக்கூ. இதில் அட்டகத்தி தினேஷ், மாளவிகா நாயர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பார்வையற்றவர்களின் காதலை மையப்படுத்திய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    குக்கூ படத்தில் பார்வையற்றவர்கள் நிறைய பேர் நடித்திருந்தனர். அதில் தினேஷின் நண்பனாக நடித்திருந்தவர் இளங்கோவன். தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்திருக்கிறார். வாடகை வீடு எடுத்து தங்கி பாட்டு பாடி அதில் வரும் பணத்தில் வாழ்ந்து வந்த அவருக்கு குக்கூ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்பிறகு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

    நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...

    Cuckoo film actor Elangovan forced to begging due to poverty, cuckoo movie download, cuckoo movie 2021, cuckoo movie download in isaimini, cuckoo movie download tamilrockers, cuckoo movie download masstamilan, cuckoo movie download tamilyogi, cuckoo movie watch online, cuckoo movie 2022, cuckoo elangovan, cuckoo actor elangovan begging, cuckoo actor begging, குக்கூ நடிகர் இளங்கோவன், பிச்சை எடுக்கும் குக்கூ நடிகர், பிச்சை எடுக்கும் நடிகர் இளங்கோவன்

    கொரோனா காலத்தில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்த இளங்கோ வேறு வழியில்லாமல் பிளாட் ஃபார்மில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். தற்போது அங்கு பாடல்கள் பாடி பிச்சை எடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் யூ-ட்யூப் சேனல்களுக்குக் கொடுத்த இண்டர்வியூ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி