ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

”ஹிந்தி தெரியாதுனு சொல்லியும் கேக்கல.. அவமானப்படுத்துனாங்க..” ஏர்போர்டில் சித்தார்த்திற்கு நடந்த கொடுமை!

”ஹிந்தி தெரியாதுனு சொல்லியும் கேக்கல.. அவமானப்படுத்துனாங்க..” ஏர்போர்டில் சித்தார்த்திற்கு நடந்த கொடுமை!

நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த்

ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர் - சித்தார்த்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை விமானநிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாகவும் ஆங்கிலத்தில் பேச சொல்லியும் தொடர்ந்து ஹிந்தியில் பேசி வந்ததாகவும் நடிகர் சித்தார்த் வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் அன்மையில் பதிவு செய்திருந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதில் மதுரை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபடும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் புகைப்படத்துடன்,"காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம்.

என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை காயின்களை வெளியே எடுக்க வைத்தனர். ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர்.மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறினர்.

வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறைந்துவிடும் நிலையில், அதன் ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Siddharth claims he was 'harassed' at Madurai airport: 'Made my parents remove...'

First published:

Tags: Actor Siddharth, Madhurai Airport, Madurai