Home /News /entertainment /

மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் - இளையராஜாவை தொடர்ந்து பிரதமருக்கு ஆதரவாக பாக்யராஜ்

மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் - இளையராஜாவை தொடர்ந்து பிரதமருக்கு ஆதரவாக பாக்யராஜ்

பாக்யராஜ் - அண்ணாமலை

பாக்யராஜ் - அண்ணாமலை

இளையராஜாவை தொடர்ந்து பாக்யராஜும் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.

    மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

    பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்நூலினை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட, திரைப்பட இயக்குனர் பாக்யராஜ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ், தயாரிப்பாளர் ராம்குமார் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

    அதில் பேசிய பாக்யராஜ், “பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்கள் நல்லதையும் பேச மாட்டார்கள், பிறர் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். பிரதமர் மோடியின் எனர்ஜி எனக்கு பிடித்திருக்கிறது” என்றார்.

    சமீபத்தில் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியிருந்த முன்னுரை சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியது. அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பேசுபொருளாகின.

    தஞ்சையில் கல்லூரி படிப்பு, 27 வயதில் ராக்கி பாயின் அம்மா - கவனம் ஈர்க்கும் அர்ச்சனா ஜோய்ஸ்!

    Critics of Modi were born prematurely - Bhagyaraj in support of the Prime Minister Narendra Modi following Ilayaraja, bhagyaraj son, bhagyaraj directed movies, bhagyaraj awards, bhagyaraj age, bhagyaraj wife, bhagyaraj family, பாக்யராஜ், இயக்குநர் பாக்யராஜ், நடிகர் பாக்யராஜ், bhagyaraj, daughter Ilayaraja compares Modi to Ambedkar, Ilaiyaraaja concert in Chennai, ilayaraja, ilayaraja modi ambedkar, ilayaraja live concert, rock with raaja, rock with raaja concert, இளையராஜா லைவ், இளையராஜா இசைக்கச்சேரி,  ilayaraja birthday, ilayaraja songs, isaignani ilayaraja, ilayaraja song list, ilaiyaraaja, ilaiyaraaja birthday, ilaiyaraaja songs, ilaiyaraaja song list, ilaiyaraaja music, ilaiyaraaja awards, isaignani ilaiyaraaja, ilayaraja caste, இளையராஜா, இசைஞானி இளையராஜா, இளையராஜா பாடல்கள், இளையராஜா இசை, இளையராஜா விருதுகள், இளையராஜா மெலடி, pm narendra modi movie, narendra modi movie online, narendra modi drawing, modi car price, ilaiyaraja modi
    பாக்யராஜ் - இளையராஜா


    இளையராஜா இப்படி கூறலாமா? என ஒரு தரப்பும், இளையராஜா எப்படிக் கூறலாம்? என இளையராஜாவுக்கு எதிராக ஒரு தரப்பும் புறப்பட, இளையராஜாவுக்கும் ஒரு கருத்து இருக்கும் அவரும் கருத்து கூறலாம் என்று, மூன்று வகையான கருத்துக்கள் தற்போது இளையராஜாவின் முன்னுரையை தொடர்ந்து பெரும் கட்டுரையாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இளையராஜாவை தொடர்ந்து பாக்யராஜும் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Director Bhagyaraj

    அடுத்த செய்தி