ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பேட்ட, விஸ்வாசம்...?

Petta and Viswasam | “நான் நல்லவன் தான் ரொம்ப நல்லவன் கிடையாது” என்று ரஜினி ஒரு வசனம் பேசுகிறார். யாருக்கு அதனை குறிப்பிடுகிறார்? என்பது தெரியவில்லை.

news18
Updated: January 10, 2019, 10:23 AM IST
ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பேட்ட, விஸ்வாசம்...?
ரஜினிகாந்த், அஜித்
news18
Updated: January 10, 2019, 10:23 AM IST
பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியான பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாகவே படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாரான பேட்ட, அஜித்குமார் நடிப்பில் சிவா இயக்கத்தில் தயாரான விஸ்வாசம் ஆகிய இரு திரைப்படங்களும் இன்று காலை வெளியானது.

அதிகாலை 4 மணிக்கே தியேட்டர்களில் ரசிகர்கள் குவியத்தொடங்கினர். தங்களது ஆதர்ச நாயகன்களை காண குளிரையும் பொருட்படுத்தாது ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

பேட்ட படம் பார்க்க ஜப்பானில் இருந்து வந்திருந்த ரஜினி ரசிகர்


ஆண்களுக்கு நிகராக பல தியேட்டர்களில் பெண்களின் கூட்டமும் அலை மோதியது. பேனருக்கு பாலபிஷேகம், மாலை, மரியாதை என்று வழக்கமான சடங்குகளுடன் ரசிகர்கள் படம் பார்க்க தயார் ஆனார்கள். விஸ்வாசம் படத்தை பொறுத்தவரை முழுவதுமாக குடும்பப்படமாக இருப்பதாக முதல் காட்சி பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

வீரம் படத்திற்கு பிறகு குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குநர் சிவா உருவாக்கியுள்ளார். தனது வழக்கமான மசாலா இல்லாமல், கிராமம், மக்கள், குடும்பம், மனைவி, மகள் என படத்தின் கதை நகர்கிறது. மொத்தமாக அஜித்துக்கும் இது வேறு விதமான படமாக இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விஸ்வாசம் படத்துக்கு நேரதிராக பேட்ட படத்தின் கதைக்களம் இருக்கிறது. “ஒரு நல்லாட்சி எப்படி இருக்குமோ அப்படி தான் இனிமே இந்த ஹாஸ்டல் இருக்கும்”, “புதுசா வரவங்கள தொறத்துற அரசியல் இங்கு இருந்து தான் தொடங்குது” என்ற வசனங்களுடன் பேட்ட திரைப்படம் தொடங்குகிறது. ரஜினிகாந்தின் அறிமுக காட்சியில் முதல் வசனம் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்று இடம்பெற்றுள்ளது.
Loading...மேலும், “நான் நல்லவன் தான் ரொம்ப நல்லவன் கிடையாது” என்று ரஜினி ஒரு வசனம் பேசுகிறார். யாருக்கு அதனை குறிப்பிடுகிறார்? என்பது தெரியவில்லை.

இதன் மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டையும் ரஜினி மறைமுகமாக கூறியுள்ளார். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என்று பல நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும் முழுவதுமாக இது ரஜினி படமாகவே தயாராகியுள்ளது. மாஸ் வசனங்கள், சண்டைக்காட்சிகள், நடன அசைவுகள் என்று ரஜினிகாந்த் ஒன் மேன் ஆர்மியாக படத்தில் கலக்கியுள்ளார்.

சிறு வயதில் இருந்து ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்பாராஜ், ரஜினியை செதுக்கி மாஸான காட்சிகளை உருவாக்கியுள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பேட்ட vs விஸ்வாசம் என்ற போட்டியில் இரு படங்களுமே நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. எனினும், வசூல் ரீதியாக எந்த படம் டாப் இடத்தைப் பிடிக்கிறது என்பது பின்னர் தெரியவரும்.

Also See..

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...