ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு வழக்கு

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு வழக்கு

விஜய் சேதுபதி மற்றும் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகா காந்தி என்பவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

மகா காந்தி என்றால் யாருக்கும் தெரியாது. நவம்பர் 2-ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றது பிரச்சனையானதே... அந்த நபர் தான் இந்த மகா காந்தி. இவர் தனது மனுவில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக கர்நாடக மாநிலம் மைசூருக்கு நவம்பர் 2-ல் சென்றேன். அப்போது, பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். அவரின் நடிப்புத் திறன் சாதனைகைளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன்.

வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவுப்படுத்தியும், சாதிப் பெயரை குறிப்பிட்டும் பேசினார். நான் விமான நிலையத்திற்கு வெளியே வந்த பின் தனது மேலாளர் ஜான்சனை ஏவி விட்டு, கன்னம் மற்றும் காது உள்ளிட்ட இடங்களில் தாக்கினார்.

டாக்டர்கள் பரிசோதித்ததில் என் செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே விஜய் சேதுபதி மற்றும் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க - வடிவேலுவை சந்தித்த பிக்பாஸ் மதுமிதா- வைரல் புகைப்படம்

மகா காந்தியின் குற்றச்சாட்டுக்கு மாறாக வீடியோ காட்சிகள் உள்ளன. மகா காந்தி ஓடிச் சென்று விஜய் சேதுபதியை தாக்க முயல்வது அதில் தெளிவாக உள்ளது. சாதியைச் சொல்லி திட்டுவதற்கு, முன்பின் அறியாத மகா காந்தி எந்த சாதி என்று விஜய் சேதுபதிக்கு எப்படி தெரிந்தது? இப்படி மகா காந்தியின் திரைக்கதையில் நிறைய ஓட்டைகள். மனு ஏற்றுக் கொள்ளப்படுவதே சந்தேகம் தான்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Actor Vijay Sethupathi