• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sreesanth: இந்தி படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்!

Sreesanth: இந்தி படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்!

ஸ்ரீசாந்த்

ஸ்ரீசாந்த்

கிரிக்கெட்டை அடுத்து ஸ்ரீசாந்துக்கு ஆர்வம் உள்ள துறை சினிமா. எனினும் குறிப்பிடும்படி அதில் எந்த சாதனையும் அவர் செய்யவில்லை.

  • Share this:
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் திரைப்படம் ஒன்றில் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார்.

    கேரளாவிலிருந்து தடகளத்தில் பி.டி.உஷா போன்ற பலர் சாதனை படைத்துள்ளனர். கால்பந்தில் பலர் தேசிய அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், கிரிக்கெட்டில் நெடுநாள்வரை கேரளாவின் பங்களிப்பு பூஜ்ஜியமாகவே இருந்தது. ஸ்ரீசாந்த் அதனை மாற்றினார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக இடம்பிடித்தார். பெட்டிங் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வெகு விரைவில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முற்றுப்புள்ளியை எட்டியது.

    கிரிக்கெட்டை அடுத்து ஸ்ரீசாந்துக்கு ஆர்வம் உள்ள துறை சினிமா. எனினும் குறிப்பிடும்படி அதில் எந்த சாதனையும் அவர் செய்யவில்லை. இந்நிலையில், இந்திப் படம் ஒன்றில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படம் ஒரு எக்ஸ்பெரிமெண்டல் பொலிடிகல் த்ரில்லர். இதில் ஸ்ரீசாந்த் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். படத்துக்கு பட்டா (Patta) என்று பெயர் வைத்துள்ளனர். புத்திசாலியான, சக அதிகாரிகளால் கணிக்க முடியாத அளவுக்கு திறன் வாய்ந்தவராக ஸ்ரீசாந்தின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்தப் படத்துக்கு சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைக்கிறார். பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீதர் நடன அமைப்பை கவனிக்கிறார். கோவிட் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் படப்பிடிப்பை தொடங்கயிருப்பதாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: