கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோ பிக்-ன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சபாஷ் மித்து என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மிதாலி ராஜின் கேரக்டரில் நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார். முதலில் இந்தப் படத்தை ராகுல் தொலாகியா இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அவர் விலகினார்.
இதையடுத்து இந்தப் படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். கடந்த 2019, டிசம்பர் 3ம் தேதி மிதாலி ராஜின் பிறந்த நாளையொட்டி, அவரது பயோ பிக் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
இந்தாண்டு பிப்ரவரி 4-ம்தேதி சபாஷ் மித்து வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பு பணிகள், போஸ்ட் புரொடக்சன் உள்ளிட்டவை காரணமாக அடுத்த மாதம் 15-ம்தேதி படம் வெளியாகம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை எடுக்கப்பட்ட பயோ பிக் படங்களுக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது. பாக் மில்கா பாக், தோனி உள்ளிட்ட படங்கள் இவற்றில் அடங்கும். ஆனால் சமீபத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான 83 என்ற திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்த நிலையில், புரொமோஷன் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. ஆனால், கொரோனா காரணமாக தொடர்ந்து வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் 24ம் தேதி வெளியான இந்தப் படம் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் கிரிக்கெட் ஜேனரில் அடுத்ததாக சபாஷ் மித்து படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. படம் அடுத்த மாதம் 15-ம்தேதி திரைக்கு வருகிறது.
ட்ரெய்லரைப் பார்க்க...
பிரபல கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜ் இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்ட், 232 ஒருநாள், மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
தமிழை பூர்வீகமாக கொண்ட துரைராஜ் – லீலா ராஜ் தம்பதிக்கு மகளாக கடந்த 1982 டிசம்பர் 3ம் தேதி பிறந்தார். இம்மாதம் 8ம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்தார்.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.