Home /News /entertainment /

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தோனி… என்ன ரோல் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தோனி… என்ன ரோல் தெரியுமா?

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

கிரிக்கெட்டில், தனக்கென டீமை உருவாக்கி அதை வைத்து சாதனை படைப்பது என்பது தோனிக்கு கைவந்த கலை.

கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் எம்.எஸ்.தோனி, தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி ஆகிறார். இதுகுறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழி நடத்தி டி20, ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தவர் தோனி. தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக அணியை வழி நடத்தி வருகிறார்.

தோனியின் தலைமையில் சென்னை அணி 4 முறை ஐபிஎல் பட்டத்தையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவுக்குள் தோனி நுழைவதற்கு தேவையான அடிப்படை பணிகளை செய்து முடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - ‘அரபிக்குத்து பாடலை அனிருத் தான் எழுத சொன்னார்’ – சிவகார்த்திகேயன் பேட்டி

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக தோனி களத்தில் இறங்க உள்ளார். தோனியின் முதல் படத்தில் நயன்தாரா நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட்டில், தனக்கென டீமை உருவாக்கி அதை வைத்து சாதனை படைப்பது என்பது தோனிக்கு கைவந்த கலை. அதே ஸ்டைலில் தோனி தற்போது சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து, தனக்கான டீமை உருவாக்கி வருகிறார்.

இதையும் படிங்க - ரசிகர்களின் வரவேற்பை பெறும் கே.ஜி.எஃப் 2 மேக்கிங் வீடியோ!!

ஏற்கனவே தோனியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி – தி அன்டோல்டு ஸ்டோரி திரைப்படம் மெகா ஹிட்டானது. இதில் தோனி கேரக்டரில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும், அவரது மனைவி சாக்சி கேரக்டரில் கியாரா அத்வானியும் நடித்திருப்பார்கள்.

ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் தனது சினிமா தயாரிப்பாளர் அவதாரம் குறித்து, தோனி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: MS Dhoni

அடுத்த செய்தி