கொரோனா தப்பான ஆளுடன் மோதிவிட்டது.. இனிமேல் அதன் காலம் கொஞ்சம்தான்... நடிகர் மாதவன்

கொரோனாவுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள்தான் ஆயுட்காலம் என்று அமிதாப் பச்சனுக்கு நடிகர் மாதவன் ட்வீட் செய்துள்ளார். 

கொரோனா தப்பான ஆளுடன் மோதிவிட்டது.. இனிமேல் அதன் காலம் கொஞ்சம்தான்... நடிகர் மாதவன்
மாதவன்
  • Share this:
”கொரோனா, மோதக்கூடாத இடத்தில் மோதிவிட்டது. யார் பாஸ் என்று அதற்கு காட்டுங்கள். கொரோனாவுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள்தான் ஆயுட்காலம்” என்று அமிதாப் பச்சனுக்கு நடிகர் மாதவன் ட்வீட் செய்துள்ளார்.

77 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதுடன், “எனது குடும்பத்தார் மற்றும் எனது பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.  கடந்த 10 நாட்களுக்குள் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். சிறிது நேரத்தில் அவருடைய மகனும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

பிரபலங்கள், அரசியல்வாதிகள் விரைவில் இருவரும் குணமடைய விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர். தொற்று மிதமானது எனவும் கவலையுற தேவையில்லை எனவும் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.அமிதாப் பச்சன் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என தனது ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மாதவன், ”கொரோனா, மோதக்கூடாத இடத்தில் மோதிவிட்டது. யார் பாஸ் என்று அதற்கு காட்டுங்கள். கொரோனாவுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள்தான் ஆயுட்காலம்” என்று பதிவிட்டுள்ளார்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading