• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கீர்த்தி சுரேஷ் - மகேஷ் பாபு படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா

கீர்த்தி சுரேஷ் - மகேஷ் பாபு படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா

கீர்த்தி சுரேஷ் - மகேஷ் பாபு

கீர்த்தி சுரேஷ் - மகேஷ் பாபு

கீர்த்தி சுரேஷ் - மகேஷ் பாபு புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  • Share this:
    கீர்த்தி சுரேஷ் - மகேஷ் பாபு புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது. நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா. இதில் பல நடிகர் - நடிகைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மகேஷ்பாபு - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் ’சர்காரு வாரி பாட்டா’ தெலுங்கு படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மகேஷ்பாபுவும் கீர்த்தி சுரேசும் முதல் முறையாக ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியது. முன்னதாக கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையோடு படப்பிடிப்பை நடத்தினர். அதன்படி படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு அங்கேயே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அப்போது 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர். படப்பிடிப்பில் கொரோனா பரவியது ’சர்காரு வாரி பாட்டா’ படக்குழுவினருக்கு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: