பூஜா ஹெக்டேவை தொடர்ந்து இன்னொரு விஜய் பட நடிகைக்கும் கொரோனா தொற்று

பூஜா ஹெக்டேவை தொடர்ந்து இன்னொரு விஜய் பட நடிகைக்கும் கொரோனா தொற்று

பூஜா ஹெக்டே

கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருந்தார்.

  • Share this:
    தளபதி 65 படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தார். தற்போது இன்னொரு விஜய் பட நடிகைக்கும் கொரோனாவுக்காக அறிகுறிகள் தென்படுவதாக தெரிகிறது.

    COVID-19-க்கு நான் நேர்மறையாக சோதிக்கப்பட்டுள்ளேன். எல்லா நெறிமுறைகளையும் பின்பற்றி, வீட்டிலேயே என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார் பூஜா.

    இதையடுத்து நடிகை நந்திதா ஸ்வேதாவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை தெரியப்படுத்தியுள்ளார். "கோவிட்டின் அறிகுறிகளைக் கொண்டுள்ளேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார் நந்திதா.

    ’அட்டகத்தி' படத்தின் மூலம் புகழ் பெற்ற நந்திதா ஸ்வேதா, பின்னர் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'எதிர் நீச்சல்', 'முண்டசுப்பட்டி' மற்றும் தளபதி விஜய்யின் 'புலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருந்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: