Covid 19: கொரோனா சேவையில் பாலிவுட் பிரபலங்கள்!

சோனு சூட் - டாப்ஸி

தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா பாலிவுட் திரையுலகில் தினக்கூலிகளாக இருக்கும் தொழிலாளிகளுக்கு தடுப்பூசி கிடைக்க உதவி வருகிறார்.

  • Share this:
    கொரோனா பெருந்தொற்றுக்கு பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் களத்தில் முன்னின்று உதவிகள் செய்கின்றனர்.

    இந்தி நடிகர் சோனு சூட் வில்லனாக அறியப்பட்டவர். முதல் கொரோனா தொற்றின் போதும், இரண்டாவது அலையான இப்போதும் அவர் தான் ஹீரோவாக திகழ்கிறார். கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஒரு குழு அமைத்திருப்பவர் அதன் மூலம் தொடர்ச்சியாக உதவி வருகிறார். பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்த போது சோனு சூட்டும், அவரது குழுவும் தேவையான ஆக்சிஜனை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அதனால் 22 நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். நடிகர் மாதவன் இதற்காக சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    நடிகை அனுஷ்கா சர்மா தனது கணவர் விராத் கோலியுடன் 'இன் திஸ் டுகெதர்' என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு உதவ 7 கோடி ரூபாய் நன்கொடை திரட்டுவது இதன் நோக்கம். இவர்கள் இருவரும் இணைந்து இரண்டு கோடிகள் நன்கொடை அளித்துள்ளனர்.

    நடிகர் அக்ஷய் குமார் கொரோனா நிவாரணம் என்று பாஜக எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீரிடம் ஒரு கோடி அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட அரசிடமோ, உதவிக்குழுக்களிடமோ தராமல், மோசமான எம்பி என்று பெயரெடுத்த கௌதம் கம்பீரிடம் நிவாரண தொகையை அளித்திருக்கிறாரே என்று நெட்டிசன்கள் அக்ஷய் குமாரை விமர்சித்து வருகின்றனர்.

    தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா பாலிவுட் திரையுலகில் தினக்கூலிகளாக இருக்கும் தொழிலாளிகளுக்கு தடுப்பூசி கிடைக்க உதவி வருகிறார். பொருளாகவும், பணமாகவும் அவர் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். கடந்தமுறை 3000 பேருக்கு மேல் அவர் உதவியது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை பெண்கள் மற்றும் வயதான தொழிலாளிகளுக்கு தலா 5000 ரூபாய் அளித்துள்ளார்.

    நடிகை டாப்ஸியை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உதவிக்காக தொடர்பு கொள்கிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை ட்விட்டரில் பகிரும் டாப்ஸி, அந்த உதவிகள் கிடைத்திட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். பலர் அவரால் பயன்பெற்றுள்ளனர்.

    கங்கனா ரனாவத் போன்றவர்கள் இருக்கும் அதே இந்தித் திரையுலகில் இப்படியும் நல்லவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: