ஹோம் /நியூஸ் /entertainment /

அண்ணியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை.. சீரியல் நடிகைக்கு 2 ஆண்டுகள் சிறை.. அதிரடி தீர்ப்பு!

அண்ணியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை.. சீரியல் நடிகைக்கு 2 ஆண்டுகள் சிறை.. அதிரடி தீர்ப்பு!

நடிகை அபிநயா

நடிகை அபிநயா

சமீபத்தில் விசாரணை நிறைவுபெற்ற நிலையில் அபிநயாவிற்கு 2 ஆண்டுகள் சிரை தண்டனையும், அவரது தாய் ஜெயம்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கன்னட திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாக அறியப்படும் அபிநயாவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

கன்னட திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அபிநயா. இவரது சகோதரர் ஸ்ரீநிவாஸ் என்பவருக்கும் லட்சுமி தேவி என்பவருக்கும் கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது.

திருமணத்தின்போது லட்சுமி தேவியின் பெற்றோர் அபிநயாவின் குடும்பத்திற்கு ரூ.80 ஆயிரம் பணமும், 250 கிராம் நகையும் வரதட்சனையாக கொடுத்திருக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு அபிநயா மற்றும் அவரது பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்துவந்திருக்கின்றனர்.

கர்ப்பமானதை ஏன் வெளியில் சொல்லவில்லை? ஷ்ரேயாவின் பதில்...

அப்போது மேலும் ரூ.1 லட்சம் வரதட்சனையாக வாங்கிவருமாறு லட்சுமி தேவியை ஸ்ரீநிவாஸ், அபிநயா மற்றும் அவர்களது பெற்றோர் கொடுமைபடுத்தியது மட்டுமல்லாமல், அவரது பெற்றோர் வீட்டுக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.

இதனையடுத்து வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்துவதாக கணவர் ஸ்ரீநிவாஸ், நடிகை அபிநயா, மாமனார் ராமகிருஷ்ணா, மாமியார் ஜெயம்மா ஆகியோர் மீது கடந்த 2002 ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் லட்சுமி தேவி புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் கடந்த 2012 ஆம் ஆண்டு அபிநயாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்ற 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து அபிநயா குடும்பத்தினர் பெங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் 5 பேரையும் விடுதலை செய்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து லட்சுமி தேவி மற்றும் அரசு சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் விசாரணை நிறைவுபெற்ற நிலையில் அபிநயாவிற்கு 2 ஆண்டுகள் சிரை தண்டனையும், அவரது தாய் ஜெயம்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இதில் லட்சுமி தேவியின் கணவர் ஸ்ரீநிவாசும், அவரது தந்தை ராமகிருஷ்ணாவும் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actress, Karnataka, Prison