முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சத்யராஜ் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை உத்தரவு

சத்யராஜ் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை உத்தரவு

சத்யராஜ்

சத்யராஜ்

சத்யராஜ் படம் முடிந்து தணிக்கைச் சான்றிதழும் பெற்று, வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்ட பின்பு நீதிமன்றம் விதித்த தடையுத்தரவால் பட வெளியீடு தள்ளிப் போயுள்ளது.

  • Last Updated :

சத்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் டிசம்பர் 24 இன்று வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், நீதிமன்றத்தின் தடையுத்தரவு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது.

தீர்ப்புகள் விற்கப்படும் படத்தை சட்டத்தை பின்னணியாகக் கொண்டு எடுத்திருக்கிறார்கள். தீரன் என்பவர் இயக்க சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், ஹரீஷ் உத்தமன், ரேணுகா போன்றவர்கள் நடித்துள்ளனர். படம் முடிந்து தணிக்கைச் சான்றிதழும் பெற்று, வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்ட பின்பு நீதிமன்றம் விதித்த தடையுத்தரவால் பட வெளியீடு தள்ளிப் போயுள்ளது.

தீர்ப்புகள் விற்கப்படலாம் படத்தை சஜீவ் மீராசாஹிப் ராவுத்தர் தனது ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். படத்தின் ஆரம்பகட்டத்தில் இன்பினிட்டி பிரேம்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இணை தயாரிப்பாக இந்தப் படத்துக்கு பைனான்ஸ் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கே.கே.சுதாகரன் பேசுகையில், நாங்கள் தான் அதிகம் படத்தில் முதலீடு செய்தோம் என்கிறார். ஒருகட்டத்தில் இன்பினிட்டி பிரேம்ஸை கழற்றிவிட்டு சஜீவ் தனது நிறுவனத்தின் பெயரை மட்டுமே படம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பயன்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து சுதாகரன் சஜீவ்வுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் சுதாகரன் ஆலப்புழாவில் உள்ள நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்து, படத்தை திரையரங்கு, ஓடிடி உள்பட எந்தவழியிலும் திரையிடக் கூடாது என தடை வாங்கியிருக்கிறார். இவர்கள் பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே தீர்ப்புகள் விற்கப்படும் திரைக்கு வர சாத்தியமுள்ளது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Actor sathyaraj