ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalapathy 67: தளபதி 67-ல் கேங்க்ஸ்டராக விஜய்... காஸ்ட்யூம் டிசைனர் இவரா?

Thalapathy 67: தளபதி 67-ல் கேங்க்ஸ்டராக விஜய்... காஸ்ட்யூம் டிசைனர் இவரா?

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

விஜய் தற்போது துபாயில் விடுமுறையில் இருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும் 'தளபதி 67' படத்தின் டெஸ்ட் ஷூட் நடக்கும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தளபதி 67 படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக பிரவீன் பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் 2019-ல் 'மாஸ்டர்' படத்திற்காக முதன்முறையாக இணைந்தனர். இந்தப் படத்தின் வெளியீடு கொரோனா வைரஸ் காரணமாக 2021-க்கு தள்ளிப்போனது. ஆயினும்கூட, ஆக்‌ஷன் நிறைந்த மாஸ்டர் படம் ரசிகர்களைக் கவர தவறவில்லை. இப்போது, 'தளபதி 67' படத்தில் கைதி, ஜகமே தந்திரம் மற்றும் மஹான் போன்ற படங்களில் பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் பிரவீனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விரைவில் விஜய்யுடன் லுக் டெஸ்ட் நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

  விஜய் தற்போது துபாயில் விடுமுறையில் இருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும் 'தளபதி 67' படத்தின் டெஸ்ட் ஷூட் நடக்கும். இந்தப் படத்தில் விஜய் ஒரு இரக்கமற்ற கேங்க்ஸ்டராக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான தோற்றத்திற்கு அவர் மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், நிவின் பாலி மற்றும் பல பெரிய பெயர்கள் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மத்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  விஜய்யின் எனெர்ஜி லெவல்.... வசீகரா அனுபவத்தைப் பகிர்ந்த சினேகா!
   
  View this post on Instagram

   

  A post shared by Praveen Raja (@praveenraja)  இதற்கிடையில், பொங்கலுக்கு பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது விஜய்யின் 'வாரிசு'. சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் டிராக் 'ரஞ்சிதமே' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj