லாக்டவுனில் உருவான கொரோனா வைரஸ் பற்றிய முதல் படம் - ட்ரெய்லரை வெளியிட்ட பிரபல இயக்குநர்

நம்மிடம் உள்ள பயம்தான் கொரோனா வைரஸ் படத்தின் கதை - இயக்குநர் ராம்கோபால் வர்மா

  • Share this:
கொரோனா வைரஸ் என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுக்க ஐம்பத்தைந்து லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருபத்திரெண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேவேளையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. லாக்டவுன் காலகட்டத்திலும் கொரோனா வைரஸ் என்ற டைட்டிலில் ஒரு படத்தைத் தயாரித்து அதன் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.


அகஸ்த்யா மஞ்சு இயக்கத்தில் ஸ்ரீகாந்த் அய்யங்கார் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு டிஎஸ்ஆர் இசையமைத்துள்ளார். படம் குறித்து ட்வீட் செய்திருக்கும் ராம்கோபால் வர்மா, ஊரடங்கு காலத்தில் கதை நடக்கிறது. ஊரடங்கு காலத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், கடவுள் யாராக இருந்தாலும் எங்கள் வேலையை தடுத்து நிறுத்த முடியாது என்பதை நிரூபிக்க விரும்பினேன்.நம்மிடம் உள்ள பயம் தான் கொரோனா வைரஸ் படத்தின் கதை. அச்சம், நோய், மரணம் ஆகியவற்றுக்கு எதிராக காதலின் வலிமையை இது பரிசோதிக்கிறது” என்று கூறியுள்ளார்.


First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading