• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை - வல்லுநர் குழு

நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை - வல்லுநர் குழு

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை என்று தேிசிய தடுப்பூசி ஆய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது.

  • Share this:
    நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசின் வழிகாட்டுதல்களின் படி தடுப்பூசி எடுத்து கொண்டார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனையில் நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தி கொண்டார். பொதுமக்கள் யாரும் தடுப்பூசி மீது அச்சம் கொள்ள வேண்டாம், அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தி கொண்ட அடுத்த நாள் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று சிலர் தகவல்களை பரப்பினர். இதனிடையே விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதை தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் மத்திய சுகாதார ஆணையத்திற்க கடிதம் ஒன்று அனுப்பியது. அதில் நடிகர் விவேக் மரணம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சம்ர்பிக்குமாறு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு வல்லுநர்கள் நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவிததுள்ளனர்.



    நடிகர் விவேக் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரழந்துள்ளதாக அந்த வல்லுநர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் என்று பரப்பப்ட்ட வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: