தடுப்பூசியால் இறந்தாரா நடிகர் விவேக்? புகாரை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம்

நடிகர் விவேக்

தடுப்பூசியால் தான் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

 • Share this:
  நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியால் தான் இறந்ததாக எழுந்த புகாரை, மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றது.

  தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்திருந்தார். கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரத்துக்குப் பிறகு தான் தெரிய வரும் என, மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விவேக் எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஏப்ரல் 17-ம் தேதி காலை அவரது உயிர் பிரிந்தது. 58 வயதான விவேக்கின் அந்த திடீர் மரணம், ரசிகர்களையும், திரையுலகினரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் இறப்பதற்கு 2 நாட்கள் முன்னர் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

  இந்நிலையில் தடுப்பூசியால் தான் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். தற்போது இந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: