Covid 19 - கொரோனா இரண்டாம் அலை: தென்னிந்திய சினிமாவில் கட்டுப்பாடுகள்

Covid 19 - கொரோனா இரண்டாம் அலை: தென்னிந்திய சினிமாவில் கட்டுப்பாடுகள்

தென்னிந்திய சினிமா படப்பிடிப்பு

கொரோனா இரண்டாம் அலை உக்கிரமடைந்திருக்கும் நிலையில், மாநில அரசுகள் அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தென்னிந்திய சினிமாத்துறையும் சில முடிவுகளை எடுத்துள்ளது.

  • Share this:
    கொரோனா இரண்டாம் அலை உக்கிரமடைந்திருக்கும் நிலையில், மாநில அரசுகள் அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தென்னிந்திய சினிமாத்துறையும் சில முடிவுகளை எடுத்துள்ளது.

    கர்நாடகாவில் கொரோனா தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மே 4-ம் வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திரையரங்குகள் இயங்காது. இதனையடுத்து கர்நாடகாவில் நடந்து வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. போஸ்ட் புரெடக்ஷன் பணிகளும் முடங்கியுள்ளன.

    தெலுங்கானாவில் திரையரங்குகள் வழக்கம் போல் இயங்கி வந்த நிலையில், தற்போது 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என அரசு அறிவித்துள்ளது. இதனால் பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் தவிர மற்ற அனைத்தும் ஏறக்குறைய மூடப்பட்டுவிட்டன. இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதும் இதற்கு முக்கிய காரணம்.

    இரவு நேர ஊரடங்கு அறிவிப்பால் அல்லு அர்ஜுனின் புஷ்பா, பிரபாஸின் ராதே ஷ்யாம், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராதே ஷ்யாம் படத்தில் இரவு காட்சிகள் இல்லை எனினும் கொரோனா தொற்று அதிகரிப்பால் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளதாக தயாரிப்பாளர் கூறினார். சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடந்து வந்த படப்பிடிப்புகள் அனேகமாக அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. துல்கர் சல்மானின் புதிய பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கேரளாவில் முடங்கியுள்ளன.

    தமிழகத்தில் அரசு வழிகாட்டுதலின்படி திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குகின்றன. எனினும் இரவுநேர ஊரடங்கு, ஞாயிறுகளில் முழு அடைப்பு என கட்டுப்பாடுகள் தீவிரமடைந்ததால் பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் ஆங்காகங்கே இன்னமும் நடக்கின்றன. அதேபோல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடந்து வருகின்றன. திரையங்குகள் எப்போது முழுமையாக திறக்கும், எப்போது இயல்புநிலை திரும்பும் என்பது தெரியாத நிலையில், மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தொடங்க திட்டமிட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட படங்கள் தொடங்கப்படாமலே உள்ளன. இது சினிமா தொழிலாளர்களை, துணை நடிகர்களை பெரிதும் பாதிக்க வாய்ப்புள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: