Annaatthe: கொரோனா இரண்டாம் அலை - சிக்கலில் ரஜினியின் அண்ணாத்தே!

ரஜினிகாந்த்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஹைதராபாத்தில் நடந்துவரும் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுமா என்ற அச்சத்தை அதிகரிக்கும் கொரோனா 2-ம் அலை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஹைதராபாத்தில் நடந்துவரும் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுமா என்ற அச்சத்தை அதிகரிக்கும் கொரோனா 2-ம் அலை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. தெலுங்கானா திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரவு நேர ஊரடங்கும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடப்பதாக இருந்த ரவி தேஜாவின் புதிய படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கொரோனா முதல் அலையில் பாதிக்கப்பட்ட இப்படம் கடந்த நவம்பரில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகே மீண்டும் முன்னகர ஆரம்பித்தது. ஆச்சார்யாவில் வில்லனாக நடிக்கும் சோனு சூட் கொரோனாவில் பாதிக்கப்பட, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தவிர்த்து மற்ற காட்சிகளை படமாக்கினர். இப்போது கொரோனா பரவல் அதிகமாக, படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தை ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். கொரோனா காரணமாக படப்பிடிப்பை நிறுத்த வேண்டி வந்தால் திட்டமிட்டபடி படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள்.

    இந்த திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அதே ஹைதராபாத்தில்தான் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பும் நடந்து வருகிறது. முதல் அலை முடிந்து கட்டுப்பாடுகள் தளர்த்தியதும் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கினர். படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இரண்டு வாரங்கள் முன்புதான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். இந்நிலையில் கொரோனா வேகம் எடுத்திருக்கிறது. தெலுங்குப் படங்களே படப்பிடிப்புகளை ரத்து செய்யும் நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேலும், இதில் நடிக்கும் ஜெகபதி பாபு, கொரோனா பாதிப்பு குறையும் வரை எந்தப் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். டி.இமான் இசை. வெற்றி ஒளிப்பதிவு. ரூபன் எடிட்டிங்கை கவனிக்கிறார். நவம்பரில் தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: