Home /News /entertainment /

அசோக் செல்வன் கொடுத்த கொரோனா முத்தம்!

அசோக் செல்வன் கொடுத்த கொரோனா முத்தம்!

மன்மதலீலை

மன்மதலீலை

கொரோனா தொற்றுடன் சம்யுக்தா ஹெக்டேவுக்கு முத்தம் தந்திருக்கிறார் அசோக் செல்வன்.

பறக்கும் முத்தம், பிரெஞ்ச் முத்தம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கொரோனா முத்தம்? கேள்விப்பட்டதில்லை என்றால், அப்படியொன்று உள்ளது. அசோக் செல்வன் அப்படியொரு முத்தத்தை சம்யுக்தா ஹெக்டேவுக்கு தந்திருக்கிறார்.

மன்மத லீலை இளைஞர்களின் வரவேற்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர், படம் அமோகமாக ஓடுகிறது என்கிறார்கள். ஆனால், திரையரங்கில் அத்தனை அமோகமில்லை. கம்மியாகவே கூட்டம் உள்ளது. படத்தில் அசோக் செல்வனின் கதாபாத்திரத்தைப் பார்த்த பலரும் அவர் மீது பொறாமை கொண்டிருக்கிறார்கள். அனைத்து நடிகைகளுடனும் லிப் லாக் காட்சி இருந்தால் பொறாமை வராதா என்ன. ஆனால், அசோக் செல்வனின் அனுபவம் வேறு மாதிரி இருக்கிறது. அமுதமே என்றாலும் அள்ளித் தின்பதில் ஓர் அசதி வரத்தானே செய்யும்.

மன்மத லீலை படப்பிடிப்பின் போது அசோக் செல்வன் மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறார். முக்கியமாக சம்யுக்தா ஹெக்டேவுடன் லிப் லாக் காட்சியின் போது. முத்தக்காட்சியில் நடிக்கப் போவதால் ஏற்பட்ட படப்படப்பு, சோர்வு இவற்றுடன் தான் நடித்திருக்கிறார். அதாவது முத்தமிட்டிருக்கிறார். காட்சி முடிந்த பிறகு லேசாக உடல்சூடு தெரிந்திருக்கிறது. கூடவே கடுமையான தலைவலியும்.

பீஸ்ட் ட்ரெய்லருக்கே இந்த கூட்டமா? - அசந்துபோன திரையரங்கு!

படப்பிடிப்பு முடிந்த பிறகு கோவிட் டெஸ்ட் எடுத்திருக்கிறார். பாஸிடிவ் என வந்திருக்கிறது. அதாவது கொரோனா தொற்றுடன் சம்யுக்தா ஹெக்டேவுக்கு முத்தம் தந்திருக்கிறார். மூச்சுக்காற்று பட்டாலே கொரோனா பரவும் என்கிறார்கள். அசோக் செல்வன் கொரோனா முத்தமே தந்திருக்கிறார். விஷயத்தை அவர் சம்யுக்தா ஹெக்டே உள்பட படக்குழுவினர் அனைவரிடமும் தெரிவித்திருக்கிறார். சம்யுக்தா ஹெக்டே டெஸ்ட் எடுத்துப் பார்த்திருக்கிறார், நெகடிவ். அவருக்கு மட்டுமில்லை, படக்குழுவினர் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. இந்த விஷயத்தை அசோக் செல்வனே தெரிவித்திருக்கிறார்.

முத்தம் கொடுத்த பிறகும் கொரோனா பரவலைன்னா அது என்ன கொரோனா.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி