Home /News /entertainment /

கொரோனா பாதிப்பால் அஜித் குமாரின் வலிமை ரிலிஸ் ஒத்திவைப்பு - தயாரிப்பாளர் அறிவிப்பு

கொரோனா பாதிப்பால் அஜித் குமாரின் வலிமை ரிலிஸ் ஒத்திவைப்பு - தயாரிப்பாளர் அறிவிப்பு

வலிமை

வலிமை

Valimai | கொரோனா பாதிப்பு காரணமாக வலிமை பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

    போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. 2019-ம் ஆண்டு படத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு படம் குறித்த எந்த அப்டேட்களும் வெளிவராமலேயே இருந்தது. அதனால், அதிருப்தியடைந்த ரசிகர்கள் போனி கபூரிடம் தொடர்ந்து படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். கிரிக்கெட் மைதானங்களிலும் பொது இடங்களிலும் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்கும் சூழல் உருவானது.

    அதனையடுத்து, கடந்த ஆண்டு அஜித்குமாரின் பிறந்தநாளான மே 1-ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை பாதிப்பின் காரணமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவது தள்ளிப்போனது. அதனையடுத்து, ஜூலை 11-ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனையடுத்து, படத்தின் க்ளிம்ஸ் வெளியானது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வலிமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட பொங்கலுக்கு வெளியீடு என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.


    வரும் பொங்கலுக்கு வலிமை படம் வெளியீடு என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. அதன்காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்படும் சூழலும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக போனி கபூர் அறிவித்துள்ளார்.

    பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நடிகர் சரத்குமாருக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்து போன ரசிகர்கள்!




    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பார்வையாளர்களும் ரசிகர்களுக்கும்தான் எப்போதும் எங்களுடைய மகிழ்ச்சியின் ஊற்று. கடினமான நேரங்களிலும் அவர்கள் கொடுத்த எதிர்பார்ப்பில்லாத அளவற்ற அன்புதான் எங்களுடைய கனவு படத்தை வெற்றிகரமாக எடுப்பதற்கு உதவியது. அதனால், அவர்கள் திரையரங்கில் இருக்கும் ஒவ்வொரு பொழுதையும் மகிழ்ச்சியுடன் கழிக்கவேண்டும் என்று விரும்பினோம்.

    ஆனால், எங்களுடைய எல்லா முடிவுகளையும் விட பார்வையாளர்களின் பாதுகாப்புதான் முக்கியமானதாக உள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ள இந்தநிலையில், கொரோனா பாதிப்பு இயல்புநிலையை அடையும் வரையில் வலிமை படம் வெளியீடை ஒத்திவைப்பதாக முடிவு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் திரையரங்கில் சந்திப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Ajithkumar, CoronaVirus, Valimai

    அடுத்த செய்தி