அரசு மருத்துவமனை பற்றி ஆடியோ: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் விளக்கம்

சென்னை மருத்துவமனைகளின் படுக்கை வசதி குறித்த தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.

அரசு மருத்துவமனை பற்றி ஆடியோ: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் விளக்கம்
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்
  • Share this:
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அதேவேளையில் அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்று நடிகரும், செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் சமீபத்தில் குற்றச்சாட்டு தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அளித்த புகாரின் பேரில், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதேவேளையில் மற்றொரு வீடியோவில் வரதராஜன், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறி வீடியோவை பதிவிட்டிருந்தார்.


வரதராஜனை அடுத்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், இயக்குநர் சங்க உறுப்பினருக்கு 2 நாட்கள் போராடிய பின்னர், படுக்கை கிடைத்ததாகவும், யாருக்கேனும் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை திருவள்ளூர் கொண்டுபோய் சிகிச்சையளிப்பதாகவும் வேதனையோடு ஆடியோ வெளியிட்டிருந்தார்.

மீண்டும் இதுகுறித்து வெளியிட்ட மற்றொரு ஆடியோவில், சென்னை மருத்துவமனைகளின் படுக்கை வசதி குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஆடியோவில், சென்னையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதால் அரசுக்கும் சுமை அதிகரித்திருக்கிறது. அதனால் சென்னைக்கு வெளியில் தான் நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்து தரமுடியும். சென்னையில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டால் சென்னைக்கு வெளியே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற நோக்கத்தில் தான் நான் கூறினேன்.

அதனால் கவனமாக இருந்து கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறினேன். நமது அரசு சிறப்பாக செயல்படுகிறது. அரசாங்கம் சொல்லும் வழிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்பதுதான் எனது வேதனை. அரசு இல்லையெனில் இன்னும் பாதிப்பு அதிகமாகியிருக்கும். யாரையும் குறை சொல்வதற்காக நான் அப்படி பதிவிடவில்லை” என்று ஆர்.வி.உதயகுமார் கூறியுள்ளார்.மேலும் படிக்க: இளம் வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் - பிரதமர் மற்றும் திரையுலகினர் இரங்கல்
First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading