ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இனி வெந்து தணிந்தது காடு இல்லை.. ரூட்டை மாற்றிய நடிகர் கூல் சுரேஷ்!

இனி வெந்து தணிந்தது காடு இல்லை.. ரூட்டை மாற்றிய நடிகர் கூல் சுரேஷ்!

கூல் சுரேஷ் - சிம்பு

கூல் சுரேஷ் - சிம்பு

”சிம்புவின் தீவிர ரசிகராக விரும்பி செய்கிறேன் பட வாய்ப்புக்காக இதை எல்லாம் செய்யவில்லை”

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இனி வெந்து தணிந்தது காடு டயலாக்கை கூறமாட்டேன் என நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் கூல் சுரேஷ் வீடியோவில் ரசிகர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

  'வெந்து தணிந்தது காடு சிம்புக்கு வணக்கத்த போடு' என்ற வசனத்தின் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார். பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் படத்தின் மூலம் அறிமுகமான கூல் சுரேஷ் மச்சி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சிம்பு படத்தில் இவருக்கு கண்டிப்பாக ரோல் கொடுக்கப்படும். தற்போது வெள்ளித்திரையை காட்டிலும் சோஷியல் மீடியாவில் கூல் சுரேஷ் பயங்கர ஃபேமஸ்.

  பிக் பாஸில் என்ன நடக்கிறது? அசல் கோளாறு செய்த விஷயத்தால் வெடித்தது சர்ச்சை!

  திரையில் வெளியாகும் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று ரிவியூ கொடுப்பது தான் இவரின் ஸ்டைல். மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு பிரஷ் செய்துக்கொண்டே ரிவியூ சொன்னார். பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையில் வந்தார். இப்படி

  ட்ரெண்டிங் விஷயங்கள் கையில் எடுத்து கொண்டு அதன் மூலம் பலரின் கவனத்தை பெறும் கூல் சுரேஷ் இனிமேல் வெந்து தணிந்தது காடு டயலாக்கை கூற மாட்டேன் என கூறியுள்ளார்.

  அதற்கு பதிலாக சிம்பு நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் பத்து தல படத்தை வைத்து வேற டயலாக்கை யோசித்து வைத்திருப்பதாகவும் இனிமேல் அதை எல்லா இடத்திலும் பயன்படுத்த போவதாக கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அது என்ன? டயலாக் என்பதை நாளை தெரிவிக்கிறேன் என கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

  மாநாடு படத்தின் ரிலீஸின் போது தியேட்டர் முன்பு மீடியாவிடம் கூல் சுரேஷ் பேசியவை யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பெற்று இருந்தன. இவை அனைத்தையும் சிம்புவின் தீவிர ரசிகராக விரும்பி செய்கிறேன் என்றும் பட வாய்ப்புக்காக இதை எல்லாம் செய்யவில்லை எனவும் அந்த வீடியோவில் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Kollywood, Simbu, Tamil Cinema